Find answers to your questions and learn how to make the most of your Tamil learning journey. We're here to help you succeed!

playwithtamil.com, தமிழைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில், பொழுதுபோக்கான மற்றும் மாணவரோடு ஊடாடும் வகையில் அமைந்துள்ளது.காணொளி விளையாட்டுகள், விளையாடும் உணர்வைக் கொடுக்கும் அதே வேளையில், தமிழ் பண்பாட்டோடு தொடர்புள்ள காட்சிகளையும் கொண்டுள்ளது. இளம் குழந்தைகளை தமிழின்பால் ஈர்க்கும் பல்வேறு வகையான விளையாட்டுகளைக் கொண்டுள்ளது.

தாய் மொழியில் கல்வி பயிலும் குழந்தைகளே மிகவும் ஆழமாகக் கற்கின்றனர். தாய்மொழியே குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டுகிறது. தாய் மொழியில் கற்றவற்றை சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. தன்னம்பிக்கை, பேச்சாற்றல், மற்றும் ஆக்கத்திறன் அதிகரிக்கின்றன. நமக்கு உயிர் கொடுத்தவள் தாய்! நமக்கு அடையாளம் கொடுத்தது நம் தாய்மொழியல்லவா! 'நாம் யார்?'' என்னும் கேள்விக்கு ஒரே விடை – நம் மொழியும் பண்பாடும் மட்டுமே!

உங்களை இத்தளத்திற்கு அகமகிழ்ந்து வரவேற்கிறோம்! playwithtamil.com இணையதளம் என்பது விளையாட்டின் வழி தமிழைக் கற்றுக் கொள்வதற்கான தளமாகும். இத்தளம் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் விரும்பும் பல வகையான கற்றல் விளையாட்டுகளைக் கொண்டுள்ளது. கற்றல் சூழல்கள் மாறிவரும் இக்காலத்தில், உலகமயமாக்கப்பட்ட சூழலில் வாழும் தமிழ் மாணவர்களின் தமிழ் மொழிக் கற்றலுக்கு உதவும் வகையில், வலுவான தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டின் வழி கற்றல் தளத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள் ஆகும்.

ஒரு செயலைச் செய்யும் போது, அதனை மகிழ்ச்சி தரும் ஒரு செயற்பாட்டோடு சேர்த்துச் செய்யும்போது அது முழுமை பெறும். இதையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புகிறார்கள். அவ்வகையில், வெவ்வேறு கருப்பொருள்களின் அடிப்படையில் மாணவர்களுக்கான விளையாட்டுச் செயற்பாடுகளை நாங்கள் தொகுத்துள்ளோம். பண்டைய தமிழரின் ஐந்திணை நிலங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எளிமையான, வண்ணமயமான இச்செயற்பாடுகளை விளையாடுவதோடு மட்டுமல்லாமல், அச்செடுக்கவும் முடியும்.

ஒரு மொழியைக் கற்கும் போது எழும் சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தொடர்ச்சியான பயிற்சி முக்கியமாகும். அதிலும், பள்ளி மாணவர்கள் விளையாட்டின் மூலம் செயற்பாடு அடிப்படையிலான பயிற்சி செய்வது சிறந்த முறையாகும். வார்த்தை விளையாட்டுகள் மற்றும் பல கற்றல் விளையாட்டுகளை Playwithtamil தளத்தின் மூலம், அவர்கள் தங்கள் சொற்களஞ்சியத்தை அதிகரிக்கவும், தமிழ் எழுத்துத் திறனைப் பயிற்சி செய்யவும் முடியும்.

இத்தளம் தமிழைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கான அதே வேளையில், மாணவரின் சிந்தனையோடு ஊடாடும் வகையில் அமைந்துள்ளது. காணொளி விளையாட்டுகள், விளையாடும் உணர்வைக் கொடுக்கும் அதே வேளையில், தமிழ் பண்பாட்டோடு தொடர்புள்ள காட்சிகளையும் கொண்டுள்ளது. இளம் குழந்தைகளை தமிழின்பால் ஈர்க்கும் பல்வேறு வகையான விளையாட்டுகளைக் கொண்டுள்ளது.

செயற்பாடு அடிப்படையிலான கற்றல் விளையாட்டுகளை விளையாடும் போது, குழந்தைகள் மொழியை ஆர்வத்தோடு கற்பர். ஒரு மொழியைக் கற்பதற்கு விளையாட்டு எவ்வாறு முதன்மையான பங்கு வகிக்கிறது என்பது தொடர்பான பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. செயற்பாடு அடிப்படையிலான விளையாட்டுகள் எளிமையானவை, எளிதானவை என்றும், குழந்தைகள் மொழியை விரைவாகக் கற்றுக்கொள்கின்றன; மேலும், அவர்கள் மொழியியல் திறன்களை மேம்படுத்துகின்றன என்றும், ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகின்றன.

தமிழ் மொழியைக் கற்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தொடர்ச்சியான பயிற்சியே உதவும். அதிலும், செயற்பாடு அடிப்படையிலான விளையாட்டுகள் சிறந்த முறையாகும். பல்வகையான கற்றல் விளையாட்டுகளை தமிழில் விளையாடுவதன் மூலம், அவர்கள் தங்கள் சொற்களஞ்சியத்தை அதிகரிக்கவும், தமிழ் எழுத்துத் திறனைப் பயிற்சி செய்யவும் முடியும்.

செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கற்றல் என்பது ஒரு வகைக் கற்பித்தல் உத்தியாகும். அதாவது, ஆசிரியர் அல்லது பெற்றோரின் மேற்பார்வையில், தங்களுக்கு உகந்த நேரத்துக்குள் அல்லது வேகத்தில், குழந்தைகள் செயற்பாடுகள் மூலம் கற்றுக்கொள்வதாகும். இது குழந்தைகளோடு ஊடாடியும், அவர்களை ஈர்த்தும் முறையாக கற்பிக்கும் ஒரு செயல் முறை ஆகும்.

வீட்டில் தமிழ் கற்பிப்பது, உங்கள் குழந்தையின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு வேர்களுடன் இணைக்கும் ஒரு அரிய அனுபவமாகும். ஆக்கப்பூர்வமான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய உத்திகள் மூலம், தமிழ் கற்றலை ஆர்வமூட்டும் மற்றும் பயனுள்ளதாக மாற்ற முடியும். உங்கள் குழந்தைக்கு வீட்டிலேயே தமிழ் கற்றல் அனுபவத்தை எளிதாக்க உதவும் ஒரு ஆழமான வழிகாட்டி இங்கே வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு 10 வயதுக்கு முன்னரே தமிழ் கற்றுக் கொடுப்பதன் மூலம் நீடித்த பலன்களை பெற முடியும். இந்த வயதில், அவர்களின் மனம் கடற்பாசி போல புதிய தகவல்களை விரைவாக உறிஞ்சுகிறது. ஒவ்வொரு தமிழ் குழந்தையும் தங்கள் தாய்மொழி மற்றும் பண்பாட்டில் வலுவான அடித்தளத்தை உருவாக்க, எவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டி இங்கே வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் பண்பாடு என்பது பல நூற்றாண்டுகளின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலை ஆகியவற்றால் பின்னப்பட்ட ஒரு துடிப்பான மற்றும் சிக்கலான நடைமுறை வாழ்க்கை முறை ஆகும். பள்ளிகள் தமிழ் பண்பாட்டின் அடிப்படை புரிதலை வழங்கும், ஆனால் அதன் பல ஆர்வமூட்டும் அம்சங்கள் வகுப்பறை கற்றலில் வெளிப்படுத்தப்படாமல் இருக்கும். இங்கே, வகுப்பறையில் காண முடியாத தமிழ் பண்பாட்டின் தனித்துவமான அம்சங்களை ஆராயுங்கள்.









பதிப்புரிமை 2025. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.